×

நாஞ்சில் சம்பத் இன்று முதல் 2 நாட்கள் பிரசாரம் குமரியில் பிப்.12ல் கனிமொழி, 14ல் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் சுரேஷ்ராஜன் அறிக்கை

நாகர்கோவிலில் பிப்.9: நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய வரும் 12ம் தேதி கனிமொழி எம்.பி.யும், திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வரும் 14ம் தேதியும் குமரி மாவட்டம் வருகின்றனர்.நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நாஞ்சில் சம்பத் இன்று பிரசாரம் செய்ய உள்ளார். அவர் இன்று (9ம் தேதி) மாலை 4 மணிக்கு குளச்சல், 5.15க்கு மண்டைக்காடு, மாலை 6.30 மணிக்கு மணவாளக்குறிச்சி, இரவு 8 மணிக்கு இரணியலிலும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். நாளை (10ம் தேதி) மாலை 4 மணிக்கு நாகர்கோவில் மாநகராட்சியில் பார்வதிபுரம், 5.15க்கு சுசீந்திரம், மாலை 6.30க்கு மணிக்கு ெகாட்டாரம், இரவு 8 மணிக்கு கன்னியாகுமரி பகுதிகளிலும் நாஞ்சில் சம்பத் பிரசாரம் செய்து திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்.

குமரி மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கனிமொழி எம்.பி தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார். அவர் வரும் 12ம் தேதி காலை 10 மணிக்கு நாகர்கோவில் மாநகராட்சியில் ராமன்புதூர் பகுதியிலும், அன்று மாலை 4 மணிக்கு கொல்லங்கோடு நகராட்சி பகுதியிலும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளார்.

 நாகர்கோவில் மாநகராட்சியில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய மாநில திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ வரும் 14ம் தேதி குமரி மாவட்டம் வருகிறார். அவர் அன்று காலை 10 மணிக்கு நாகர்கோவில் மாநகராட்சியில் 52 வார்டுகளிலும் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வேப்பமூடு சந்திப்பில் பிரசாரம் செய்ய உள்ளார் என்று கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் சுரேஷ்ராஜன் தெரிவித்துள்ளார்.

கே.எஸ்.அழகிரி இன்று குமரியில் பிரசாரம்
தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழ்நாடு காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் ரமேஷ் சென்னிதலா மற்றும் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சிரிவல்ல பிரசாத் ஆகியோர் குமரி மாவட்டத்தில் இன்று (9ம் தேதி) நகர்புற உள்ளாட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கின்றனர். இன்று காலை 10.30 மணிக்கு நாகர்கோவில் வேப்பமூடு ஜங்ஷனில் காமராஜர் சிலை அருகிலும், மாலை 3 மணிக்கு குளச்சல் பேருந்து நிலையம் காமராஜர் சிலை   முன்புறம், மாலை 4.30 மணிக்கு கொல்லங்கோடு ஜங்ஷன் கண்ணநாகம் அருகிலும், மாலை 6 மணிக்கு குழித்துறை ஜங்ஷன் புது பஸ் ஸ்டாண்ட் அருகிலும், இரவு 7 மணிக்கு தக்கலை ஜங்ஷன் அண்ணா சிலை அருகிலும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர்.

Tags : Nanjil Sampath ,Kanimozhi ,Udayanithi ,Stalin ,
× RELATED முதல்வர் பதவிக்காக சசிகலாவை காட்டிக்...