×

தோகைமலை அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

தோகைமலை பிப். 9: தோகைமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் வளர்மதி தலைமையில் நடந்தது.பள்ளியின் முன்னாள் மாணவர்களான தோகைமலை ஒன்றிய குழு துணை தலைவர் பாப்பாத்தி சின்னவழியான், தோகைமலை ஊராட்சி தலைவர் தனமாலினி கந்தசாமி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பானுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக தோகைமலை தமிழ் சங்கத்தின் நிறுவனர் காந்திராஜன், மணப்பாறை தனியார் மருத்துவமனை இயக்குநர் கலையரசன் ஆகியோர் கலந்துகொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். இதில் நட்பை வளர்ப்பதைபோல் மரக்கன்றுகள் நட்டு வளர்ப்பது மற்றும் பாரம்பரியமிக்க பழைய உணவு முறைகளை கடைபிடிப்பது உள்ளிட்ட உறுதிமொழிகளை ஏற்றனர்.நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

Tags : Tokaimalai Government ,School ,
× RELATED சேம்பார் பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி