×

கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் மாசிமக பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவக்கம்

ஜெயங்கொண்டம், பிப்.9: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் உலகப் புகழ்பெற்ற பிரசித்திபெற்ற கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் மாசிமகத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது இந்த திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற உள்ள நிலையில் நேற்று முன்தினம் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ேநற்று யுனெஸ்கோவால் உலக புராதன சின்னமாக அறிவிக்கப்பட்ட கங்கைகொண்ட சோழபுரம்  பிரகன்நாயகி அம்பாள் சமேத  அகத்தீஸ்வரர் சுவாமி கோயிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கொடியேற்றப்பட்டது காலை துவங்கிய இவ்விழா சுவாமி அம்பாள் அலங்காரத்தில் பிரகார சுற்றி வந்த நிலையில் கொடிமரம் முன்பு கொடியேற்றப்பட்டு கொடி மரத்திற்கும் சுவாமி அம்பாளுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது இதில் அறநிலையத் துறை அதிகாரிகளும் கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுமம் குடும்பத்தினரும் மேலும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி அம்பாளை தரிசித்தனர். பின்னர் கர்ப்பகிரகத்தில் உள்ள லிங்கத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று மலர் அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. விழாவானது தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற உள்ள நிலையில் 17ம் தேதி சுவாமி வீதிஉலா நடைபெற்று  காஞ்சி காமகோடி பீடம் பக்தர்கள் உபயத்தில் தீர்த்தவாரி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Cholapuram Brihadeeswarar Temple ,Ganges ,
× RELATED சித்திரை மாத சிறப்புகள்