×

தேசிய அளவிலான போட்டியில் முதலிடம் தஞ்சை சாஸ்த்ரா பல்கலை. மாணவருக்கு பாராட்டு

தஞ்சை, பிப்.9:தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகம் மத்திய அரசின் உன்னத் பாரத் அபியான் என்ற இந்தியாவின் கிராமப்புற வளர்ச்சிக்கான மத்திய மனித வள மேம்பாட்டுத்துறையின் முதன்மையான திட்டத்தில் பங்கேற்றுள்ளது. சாஸ்த்ரா பல்கலைக்கழகம்தஞ்சாவூர் மாவட்டத்தில் திருமலைசமுத்திரம், மருதக்குடி, செல்லப்பன்பேட்டை, ஆவாரம்பட்டி மற்றும் சென்னம்பட்டி ஆகிய 5 கிராமங்களையும் தத்தெடுத்துள்ளது. சாஸ்த்ரா பல்கலைக்கழகம் இத்திட்டத்தில் பிராந்திய ஒருங்கிணைப்பு நிறுவனமாக தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகவேளாண் வணிக மேம்பாட்டுத் துறையின் வழிகாட்டுதலின் கீழ் பணியாற்றி வருகிறது, அவற்றின் ஒரு பகுதியாக,பிராந்திய ஒருங்கிணைப்பு நிறுவனத்தின் வழிகாட்டுதல்படி,சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த 4 மாணவர்கள் ஜூலை 2021 இல் COVID 19 தொற்று நோய் விழிப்புணர்வு சுவரொட்டி மற்றும் வீடியோ உருவாக்கும் போட்டிகளில் பங்கேற்றனர். கீர்த்தனா இரண்டாம்ஆண்டுஆப்டோமெட்ரி மற்றும் விநாயக் நான்காம் ஆண்டு பி.டெக் மெக்கானிக்கல் ஆகியோர் சுவரொட்டிகள் சமர்ப்பித்தனர்.

முனிபாக்யால கல்யாண் நான்காம் ஆண்டு பி.டெக் எலெக்ட்ரானிக்கல்மற்றும் கே முகமது ஷாஜித்நான்காம்ஆண்டு பி.டெக்கம்ப்யூட்டர் சயின்ஸ்ஆகியோர் கோவிட் 19 தொற்று நோய் குறித்த விழிப்புணர்வை உருவாக்கும் வீடியோக்களை சமர்ப்பித்துள்ளனர். மேலும் இப்போட்டிகளில் 160க்கும் மேற்பட்ட உயர் கல்வி நிறுவனங்களின் மாணவர்கள் பங்கேற்றனர், சாஸ்த்ரா பல்கலைக்கழக மாணவர் முனிபாக்யாலகல்யாண் கோயம்புத்தூரில் தமிழ் நாடு வேளாண் பல்கலைக்கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் அவரது வீடியோ காட்சிக்கு பிராந்திய அளவில் முதல் பரிசு பெற்றார்.அவருக்கு ரூ.10000 ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. மேலும் புது டெல்லியிலுள்ள உன்னத் பாரத் அபியான் மத்திய ஒருங்கிணைப்பு நிறுவனமான ஐ ஐ டி டெல்லி நடத்திய தேசிய அளவிலான போட்டிகளிலும் முனிபாக்யால கல்யாணின் குறும்படம் முதலிடம் பெற்றது. அவருக்கு ரூ. 21,000 ரொக்கப்பரிசும் பாராட்டு சான்றிதழும்வழங்கப்பட்டது. ஒரே போட்டியில் இரு முதல்பரிசுகளை வென்ற மாணவரை சாஸ்த்ரா பல்கலைக்கழக நிர்வாகம், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வாழ்த்தினர். இத்தகவலை சாஸ்த்ரா பல்கலைக்கழக டீன்(பெருநிறுவன உறவுகள் மற்றும் விரிவாக்க செயல்பாடுகள்) பத்ரிநாத் தெரிவித்தார்.


Tags : Tanjore Sastra University ,
× RELATED 'அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ள தஞ்சை...