×

பெருங்குடி 186வது வார்டு திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

ஆலந்தூர்:  சென்னை மாநகராட்சி பெருங்குடி மண்டலம் 186வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜெ.கே.மணிகண்டன் நேற்று, உள்ளகரம் செங்கேணியம்மன் கோயில் தெரு, பிள்ளையார் கோயில் தெரு, மந்தவெளி தெரு, பஜனை கோயில் தெரு பகுதிகளில் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது அவர், ‘’முதியோர் பென்ஷன் கிடைக்க ஏற்பாடு செய்வேன். என்னை வெற்றிப்பெற செய்தால் இந்த பகுதியில் தரமான சாலைகள், பாதுகாக்கப்பட்ட குடிநீர், மழைநீர் கால்வாய் வசதி செய்து தருவேன். இளைஞர்களுக்கு உடற்பயற்சி மையம், விளையாட்டு திடல்  உருவாக்கி தருவேன்’’ தருவேன் என்றார்.

வாக்கு சேகரிப்பின்போது  வட்ட திமுக பொறுப்பாளர் குமாரசாமி, வழக்கறிஞர் கமலநாதன், முன்னாள் கவுன்சிலர் புனிதன் ஜனார்த்தனன், ராமமூர்த்தி, லட்சுமணன், சு.ப.சரவணன், கோட்டீஸ்வரன், மகேஸ்வரன், குபேரா யோகராஜன், மணிகண்டன், ஜவகர், ரகுபதி, பி.எம்.தினேஷ், மது, மகளிரணி சங்கீதா, வாணி, வசுமதி கலா, காங்கிரஸ் வட்டார தலைவர் லோகநாதன், வட்ட தலைவர் குமார், பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.



Tags : Perungudi ,186th Ward ,DMK ,
× RELATED திருவொற்றியூர் மேற்கு பகுதி திமுக சார்பில் 1000 பேருக்கு நல உதவிகள்