×

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் வேட்பாளர்கள் இன்று முதல் தீவிர பிரசாரம்

நெல்லை, பிப். 8: தென்காசி மாவட்டத்தில் வளர்ந்து வரும் வர்த்தக நகரங்களில் ஒன்றாக புளியங்குடி திகழ்கிறது. நகர்ப்புற  உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு புளியங்குடி நகராட்சியில் மொத்தம் உள்ள 33  வார்டுகளில் போட்டியிட 232 வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.  வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனையில் அனைத்து மனுக்களும் ஏற்கப்பட்டன.  இவர்களில் 57 பேர் தங்களது வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர். இதனால்  புளியங்குடி நகராட்சியில் மொத்தம் உள்ள 33 வார்டுகளில் 175 பேர்  இறுதிப்போட்டியில் உள்ளனர். இங்கு திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜ, நாம்  தமிழர் என 5 முனைப் போட்டி நிலவுகிறது. இறுதி வேட்பாளர்கள் பட்டியல்  வெளியானதையடுத்து இன்று முதல் அனைத்து வேட்பாளர்களும் தீவிர பிரசாரத்தில்  ஈடுபட உள்ளனர்.

செங்கோட்டை: செங்கோட்டை நகராட்சியில் மொத்தம் உள்ள 24 வார்டுகளுக்கு 68 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இங்கு திமுக, அதிமுக, அமமுக, பா.ஜ. என 4 முனை போட்டி நிலவுகிறது. செங்கோட்டை நகராட்சியில் 24 வார்டுகளுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 28ம்தேதி முதல் நடந்தது. இதில் திமுக, அதிமுக, பாஜ, அமமுக வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 80 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். மனுக்கள் மீதான பரிசீலனையில் 4 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனால் 76 பேர் போட்டியிட்ட நிலையில் நேற்று வரை 8 பேர் தங்களது மனுக்களை திரும்பப்பெற்றனர். இதனால் இறுதிப்போட்டியில் தற்போது 68 பேர் உள்ளனர். இதனால் இங்கு திமுக, அதிமுக, அமமுக பா.ஜ என 4 முனை போட்டி நிலவுகிறது.

களக்காடு: களக்காடு நகராட்சியில் மொத்தம் உள்ள 27 வார்டுகளில் போட்டியிட  144 வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்திருந்தனர். வேட்பு மனுக்கள் மீதான  பரிசீலனையில் அனைத்து மனுக்களும் ஏற்கப்பட்டன. இவர்களில் 15 பேர் தங்களது  வேட்புமனுக்களை நேற்று வாபஸ் பெற்றனர். இதனால் களக்காடு நகராட்சியில்  மொத்தம் உள்ள 27 வார்டுகளில் 129 பேர் இறுதிப்போட்டியில் உள்ளனர். இங்கு  திமுக, அதிமுக, பாஜ, அமமுக, நாம் தமிழர், மக்கள் நீதிமய்யம் என 6 முனைப்  போட்டி நிலவுகிறது. இருப்பினும் பெரும்பாலான வார்டுகளில் திமுக,  அதிமுகவுக்கு இடையே தான் நேரடி போட்டி நிலவுவது குறிப்பிடத்தக்கது.

விகேபுரம்: விகேபுரம் நகராட்சியில் மொத்தம் உள்ள 21 வார்டுகளில் போட்டியிட 96 வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்திருந்தனர். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனையில் ஒரு மனு நிராகரிக்கப்பட்டு 95 மனுக்கள் ஏற்கப்பட்டன. இவர்களில் 11 பேர் தங்களது வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர். இதனால் விகேபுரம் நகராட்சியில் மொத்தம் உள்ள 21 வார்டுகளில் 84 பேர் இறுதிப்போட்டியில் உள்ளனர். இங்கு திமுக, அதிமுக, பாஜ, தேமுதிக, நாம் தமிழர் என 5 முனைப் போட்டி நிலவுகிறது.

கடையநல்லூர்: கடையநல்லூர் நகராட்சியில் மொத்தம் உள்ள 33 வார்டுகளுக்கு 176 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இங்கு திமுக, அதிமுக, காங்கிரஸ், அமமுக, பா.ஜ. என 5 முனை போட்டி நிலவுகிறது.
கடையநல்லூர் நகராட்சியில் 33 வார்டுகளுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 28ம்தேதி முதல் நடந்தது. இதில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜ, அமமுக வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 208 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இதில் நேற்று 32 பேர் தங்களது மனுக்களை திரும்பப்பெற்றனர். இதனால் இறுதிப்போட்டியில் தற்போது 176 பேர் உள்ளனர். இதனால் இங்கு திமுக, அதிமுக, காங்கிரஸ், அமமுக பா.ஜ என 5 முனை போட்டி நிலவுகிறது.

Tags : Nellai ,Tenkasi ,
× RELATED நெல்லை மக்களவைத் தொகுதியில் தேர்தல் விதிகளை மீறியதாக 564 வழக்குகள் பதிவு..!!