கறம்பக்குடியில் 73 பேர் போட்டி

கறம்பக்குடி, பிப்.8: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பேரூராட்சி தேர்தலை முன்னிட்டு மொத்தமுள்ள 15 வார்டுகளில் வேட்பு மனுதாக்கல் கடந்த 4ம் தேதி நிறைவடைந்தது. மொத்தம் 82பேர் வேட்பு மனுதாக்கல் செய்திருந்தனர். வேட்பு மனு பரிசீலனைக்கு பிறகு வேட்பு மனுவாபஸ் நாளான நேற்று 9 பேர் வாபஸ் பெற்றனர். இதனை அடுத்து தேர்தல் நடத்தும் உதவி அலுவலர்களால் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் கறம்பக்குடி பேரூராட்சி ஊரக வளர்ச்சி தேர்தல் களத்தில் வேட்பாளராக மொத்தம் 73 பேர் போட்டியிட உள்ளனர்.

Related Stories: