×

புதுக்கோட்டையில் 187 பதவி: 902 பேர் போட்டி

புதுக்கோட்டை, பிப்.8: புதுக்கோட்டை மாவட்டத்தில் இரு நகராட்சி மற்றும் 8 பேரூராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், திங்கள்கிழமை மாலை வெளியிடப்பட்ட இறுதி வேட்பாளர் பட்டியலின்படி, 187 வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு மொத்தம் 902 பேர் போட்டியிடுகின்றனர். இருவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி நகராட்சிக்கும், 8 பேரூராட்சிகளுக்கும் என மொத்தம் 189 வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இப்பதவியிடங்களுக்கு மொத்தம் 1,114 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. சனிக்கிழமை நடைபெற்ற பரிசீலனையில் 19 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. நேற்று பிற்பகல் 3 மணி வரை 191 வேட்புமனுக்கள் வாபஸ் பெறப்பட்டன. இதன்படி, 187 வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு மொத்தம் 902 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

Tags : Pudukkottai ,
× RELATED புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சந்தையில் ரூ.1.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை