பொற்பதிந்தநல்லூர் காட்டு பிள்ளையார் கோயில் கும்பாபிஷேகம்

தா.பழூர், பிப்.8:அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள பொற்பதிந்த நல்லூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற  காட்டு பிள்ளையார் கோயில் உள்ளது. இது சுமார் 97 ஆண்டுகளுக்குப் பிறகு புனரமைப்பு பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.இதில் யாகசாலை பூஜைகள் நேற்று முன்தினம் முதல் தொடங்கி திங்கள்கிழமை வரை மூன்று கட்டங்களாக நடைபெற்றது. தொடர்ந்து விமானக் கலசத்திற்கு தண்ணீர் ஊற்றப்பட்டு காட்டு பிள்ளையாருக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவில் அர்த்தனேரி, சிலால், அணைக்குடம், கோடங்குடி, தா.பழூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: