தா.பழூர் அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

தா.பழூர்,பிப்.8: தா.பழூர் அருகே உள்ள தென்கச்சி பெருமாள் நத்தம் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் நேற்று பூஜை செய்து திறக்கப்பட்டது. அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியத்தில் சுமார் 5 ஆயிரம் ‌ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்யப்பட்ட சம்பா அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் மையம் திறக்க கோரிக்கை வைத்திருந்தனர். இதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க முதல்கட்டமாக 14 இடங்களை தேர்வு செய்து ஆணை பிறப்பித்தார். இதில் தற்போது தென்கச்சி பெருமாள்நத்தம் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு விற்பனை செய்ய அறுவடை செய்த நெல் மணிகளை விவசாயிகள் கொண்டு வருகின்றனர். மேலும் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டதால் சுற்று வட்டார விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதை சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: