×

தா.பழூர் அருகே காடுவெட்டான்குறிச்சியில் நிலக்கடலை சாகுபடிக்கான தொழில்நுட்ப பயிற்சி


தா.பழூர் பிப்.8:தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் ஆடுதுறையில் தமிழ்நாடு நீர் வள நில வளத்திட்டம், கொள்ளிடம் உப வடி நிலப் பகுதியில் வேளாண் செயல்முறை விளக்க திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது . இத்திட்டத்தில் நிலக்கடலைப் பயிரில் ஒருங்கிணைந்த மேலாண்மை தொழில் நுட்பங்களுக்கான ஒரு நாள் பயிற்சி தா பழூர் அருகே உள்ள காடுவெட்டான் குறிச்சி கிராமத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநர் அம்பேத்கர் பயிற்சியினை தொடங்கி வைத்து நிலக்கடலையில் அதிக உற்பத்தி தொழில்நுட்பங்கள் குறித்து பேசினார்.

மேலும் முனைவர் ராஜு பேசுகையில், களை மற்றும் விதை நேர்த்தி முறைகள் பற்றி தெளிவாக கூறினார். பூச்சியியல் துறை உதவி பேராசிரியர் ஆனந்தி பேசுகையில், நிலக்கடலையை தாக்கும் பூச்சி மற்றும் நோய்கள் குறித்தும் அதனை கட்டுப்படுத்தும் முறைகள் பற்றியும் தெளிவாக எடுத்துரைத்தார். இத்திட்டத்தில் வேளாண் விஞ்ஞானி உழவியல் துறை உதவி பேராசிரியர் இளமதி கொள்ளிடம் உப வடிநிலப் பகுதியில் செயல்படுத்தக்கூடிய திட்டங்கள் மற்றும் நிலக்கடலையில் களை நிர்வாகம் மற்றும் ஊட்டச்சத்து மேலாண்மை குறித்து விரிவாக எடுத்துரைத்தார். இளநிலை ஆராய்ச்சியாளர்கள் பிரேம் குமார் மற்றும் ராஜதுரை ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Tags : Kaduvettankurichi ,Dhaka ,
× RELATED வங்கதேசத்துக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றதாக சேலையூர் எஸ்.ஐ. கைது!!