×

திமுக கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் ஒன்றிணைந்து தேர்தல் பணியாற்றுங்கள்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு

செங்கல்பட்டு, பிப். 8: திமுக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில், ஒன்றிணைந்து தேர்தர் பணியாற்றுங்கள் என அமைச்சர் தாமோ அன்பரசன் பேசினார். நகர்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி நடக்கிறது. இதையொட்டி, செங்கல்பட்டு நகராட்சி திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர் அறிமுக கூட்டம் நேற்று நடந்தது. எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் தலைமை வகித்தார். நகர செயலாளர் நரேந்திரன் முன்னிலை வகித்தார். அமைச்சர் தா.மோ.அன்பரசன், எம்பி செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தனர். அப்போது, அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது.

மாவட்ட தலைநகரான செங்கல்பட்டின் 33 வார்டுகளையும் திமுக கூட்டணி வென்றெடுக்க வேண்டும், இதற்காக அனைவரும் ஒன்றிணைந்து தேர்தல் பணியாற்ற வேண்டும். உள்ளாட்சியில் நல்லாட்சி தர வேண்டும் என்றார். இதேபோல் மறைமலைநகர் நகராட்சியின் 21 வார்டுகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர் அறிமுக கூட்டம் சிங்கபெருமாள் கோயில் அருகே உள்ள மல்ரோசாபுரம் பள்ளி வளாகத்தில் எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் தலைமையிலும், நகர செயலாளர் ஜெ.சண்முகம் முன்னிலையிலும் நடந்தது. இதில், செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம் மாநகராட்சி, கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு, மறைமலைநகர், மதுராந்தகம் ஆகிய நகராட்சிகள், இடைக்கழிநாடு, கருங்குழி, அச்சிறுப்பாக்கம், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், மாமல்லபுரம், ஆகிய பேரூராட்சிக்கான தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும் என பேசினார்.

Tags : DMK Coalition ,Minister ,Thamo Anparasan ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...