×

இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு 291 கவுன்சிலர் பதவிக்கு 1,253 பேர் போட்டி அதிகரட்டி, பிக்கட்டி, ேகத்தியில் 3 பேர் போட்டியின்றி தேர்வு

ஊட்டி:  நீலகிரி மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் இறுதி வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதிகரட்டி, பிக்கட்டி மற்றும் ேகத்தி பேரூராட்சிகளில் தலா ஒருவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். தற்போது 291 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 1,253 பேர் களத்தில் உள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகளில் உள்ள 108 வார்டு உறுப்பினர்கள், 11 பேரூராட்சிகளில் உள்ள 186 வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 294 உறுப்பினர்கள் நேரடி தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஒரே கட்டமாக நடக்கும் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 28ம் தேதி துவங்கியது. கடந்த 4ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதில் நகராட்சிகளில் 601 மனுக்களும், பேரூராட்சிகளில் 781 மனுக்கள் என மொத்தம் 1,382 வேட்புமனுக்கள் பெறப்பட்டன.

 5ம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடந்தது. நகராட்சிகளில் 13 மனுக்களும், பேரூராட்சிகளில் 9 மனுக்கள் என மொத்தம் 22 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 1360 மனுக்கள் ஏற்று கொள்ளப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை 3 மணி வரை வேட்புமனுகளை திரும்ப பெற கால அவகாசம் வழங்கப்பட்டது. இதில் நகராட்சிகளில் 49 பேரும், பேரூராட்சிகளில் 55 பேர் என மொத்தம் 104 பேர் தங்களது வேட்புமனுக்களை திரும்ப பெற்று கொண்டனர். தொடர்ந்து இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.

இதன்படி ஊட்டி நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் மொத்தம் 212 மனுக்கள் பெறப்பட்டது. இதில் 9 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 5 மனுக்கள் திரும்ப பெறப்பட்டது. மொத்தம் 198 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். குன்னூர் நகராட்சியில் உள்ள 30 வார்டுகளில் 146 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 1 மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 4 பேர் மனுக்களை திரும்ப பெற்று கொண்டனர். 141 பேர் போட்டியிடுகின்றனர். கூடலூர் நகராட்சியில் 21 வார்டுகளில் 121 மனுக்கள் பெறப்பட்டது. 5 பேர் திரும்ப பெற்றனர். மொத்தம் 116 பேர் போட்டியிடுகின்றனர். நெல்லியாளம் நகராட்சியில் 21 வார்டுகளில் 122 வேட்புமனுக்கள் பெறப்பட்டது. 3 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 35 பேர் மனுக்களை திரும்ப பெற்றனர். 84 பேர் போட்டியிடுகின்றனர். 4 நகராட்சிகளிலும் 49 மனுக்கள் திரும்ப பெறப்பட்டன. 539 பேர் போட்டியிடுகின்றனர்.

பேரூராட்சிகள் விபரம் வரும்மாறு: அதிகரட்டி பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் 76 வேட்புமனுக்கள் பெறப்பட்டன. இதில் 16 மனுக்கள் திரும்ப பெறப்பட்டது. ஒருவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். 59 பேர் போட்டியில் உள்ளனர். 17 வார்டுகளுக்கு தேர்தல் நடக்கிறது.
பிக்கட்டி பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 53 வேட்புமனுக்கள் பெறப்பட்டன. இதில் ஒரு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 6 மனுக்கள் திரும்ப பெறப்பட்டது. ஒருவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். 45 பேர் போட்டியில் உள்ளனர். 14 வார்டுகளுக்கு தேர்தல் நடக்கிறது.

தேவர்சோலை பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் 78 வேட்புமனுக்கள் பெறப்பட்டது. 2 மனுக்கள் திரும்ப பெறப்பட்டது. 76 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். உலிக்கல் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் 76 மனுக்கள் பெறப்பட்டன. இதில் ஒரு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 5 மனுக்கள் திரும்ப பெறப்பட்டது. 70 பேர் போட்டியிடுகின்றனர். ெஜகதளா பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 71 மனுக்கள் பெறப்பட்டன. 2 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 3 பேர் திரும்ப பெற்று கொண்டனர். 66 பேர் போட்டியில் உள்ளனர்.

கேத்தி பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் 76 மனுக்கள் பெறப்பட்டது. ஒரு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 6 மனுக்கள் திரும்ப பெறப்பட்டது. ஒருவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். 68 பேர் போட்டியில் உள்ளனர். 17 வார்டுகளுக்கு தேர்தல் நடக்கிறது. கீழ்குந்தா பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 59 மனுக்கள் பெறப்பட்டன. 5 பேர் மனுக்களை திரும்ப பெற்றனர். 54 பேர் போட்டியில் உள்ளனர். கோத்தகிரி பேரூராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. 126 வேட்புமனுக்கள் பெறப்பட்டன. 1 மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 4 மனுக்கள் திரும்ப பெறப்பட்டது. 121 பேர் போட்டியில் உள்ளனர்.
நடுவட்டம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 46 மனுக்கள் பெறப்பட்டது. 3 மனுக்கள் திரும்ப பெறப்பட்டது.

43 பேர் களத்தில் உள்ளனர். ஒவேலி பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் 68 மனுக்கள் பெறப்பட்டன. 3 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 5 மனுக்கள் திரும்ப பெறப்பட்டன. 60 பேர் களத்தில் உள்ளனர். சோலூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 52 மனுக்கள் பெறப்பட்டது. இதில் யாரும் திரும்ப பெறவில்லை. 11 பேரூராட்சிகளில் மொத்தம் 55 வேட்புமனுக்கள் திரும்ப பெறப்பட்டுள்ளன. 3 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 183 வார்டுகளுக்கு தேர்தல் நடக்கிறது. 714 பேர் போட்டியில் உள்ளனர்.

நகராட்சி, பேரூராட்சிகளை சேர்த்து மொத்தம் 104 வேட்புமனு தாக்கல் திரும்ப பெறப்பட்டன. 291 வார்டுகளில் 1,253 பேர் களத்தில் உள்ளனர். இறுதி பட்டியல் வெளியிடப்பட்டதை தொடர்ந்து சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஒரே சின்னத்தை கேட்டிருந்த ஒன்றுக்கும் மேற்பட்டோருக்கு குலுக்கல் முறையில் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்க வாய்ப்புள்ளது.

Tags : Pikatti ,Ghatti ,
× RELATED மஞ்சூர் அருகே பசுந்தேயிலைக்கு விலை...