×

97 வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் நிவேதாவுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து குவிகிறது

தொண்டாமுத்தூர்: கோவை மாநகராட்சி 97வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் கோவையின் இளம் வேட்பாளர் நிவேதா சேனாதிபதிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. கோவை மாநகராட்சியில் 97வது வார்டில் திமுக வேட்பாளராக கல்லூரி மாணவி நிவேதா சேனாதிபதி (22) போட்டியிடுகிறார். இவர், கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி மகள்.

வேட்பாளர் இறுதி பட்டியல் நேற்று வெளியானதை தொடர்ந்து தனது தேர்தல் நிவேதா சேனாதிபதி பிரசாரத்தை மருதமலை பகுதியில் துவக்கினார். இளம் வயதிலேயே அவர் தேர்தலை சந்திப்பதை அறிந்து உலகம் முழுவதில் இருந்து தமிழர்கள் நிவேதா வாழ்த்துக்கள் தெரிவித்த வண்ணம் உள்ளனர். வாட்ஸ் அப், டிவிட்டர், இன்ஸ்டாகிராமில் நிவேதா மகத்தான ஓட்டு வித்தியாத்தில் வெற்றி பெற்று சாதனை படைப்பார் என மாணவ, மாணவிகள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற உதய சூரியன் சின்னத்திற்கு வாக்களியுங்கள். கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் 97வது வார்டினை முன்மாதிரி வார்டாக மாற்றிக் காட்டுவேன். ஏற்கனவே, எனது தந்தை இந்த வார்டில் ரூ.10 லட்சம் சொந்த செலவில் கழிப்பிடம் கட்டி வருவதை தாங்கள் அறிவீர்கள்.

தெரு விளக்கு, சாலை வசதி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, சமுதாயக் கூடம், அங்கன்வாடி, ஆரம்ப சுகாதார நிலையம் என மக்களின் அடிப்படைவசதிகளை நிறைவேற்றி கொடுப்பேன். உங்கள் வீட்டு குழந்தையாக நினைத்து என்னை ஆதரித்து உதய சூரியனுக்கு வாக்களியுங்கள் என கேட்டு கொண்டார்.

Tags : DMK ,Niveda ,
× RELATED 12ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற...