பீளமேடு ஹட்கோ காலனியில் பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்றுவேன்

கோவை: கோவை மாநகராட்சி 52-வது வார்டில் திமுக வேட்பாளர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் போட்டியிடுகிறார். அவர் வார்டுக்குட்பட்ட பகுதிகளில் வீடு, வீடாக சென்று திமுக அரசின் சாதனைகளை விளக்கி துண்டு பிரசுரங்களை வாக்காளர்களுக்கு வழங்கி வாக்கு சேகரித்து வருகிறார்கள். வேட்பாளர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் பீளமேடு ஹட்கோ காலனி பகுதியில் வீடு, வீடாக சென்று பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து உதயசூரியன் சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தார்.

வேட்பாளர் இலக்குமி இளஞ்செல்விக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். பொதுமக்கள் வேட்பாளர் இலக்குமி இளஞ்செல்வியிடம் 12 ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ள பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்றி தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதற்கு வேட்பாளர் வெற்றி பெற்றதும் உடனடியாக நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தார்.

வேட்பாளருடன் மாநில பொறுப்புகுழு உறுப்பினர் புதூர் மணிகண்டன், பகுதி செயலாளர் பாலசுப்பிரமணியம், வார்டு செயலாளர்கள் ஹட்கோ செல்வம், ரவி ராஜாராம், மற்றும் வீராச்சாமி, மாணிக்கம், வாசுதேவன், முத்துக்குமார், சி.பி.ஐ. ஆதிபாண்டியன், ராமசாமி, காங்கிரஸ் சம்பத்குமார் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தனர். 52-வது வார்டு திமுக வேட்பாளர் இலக்குமி இளஞ்செல்வி ஹட்கோ காலனி பகுதி சென்று உதயசூரியன் சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தார்.

Related Stories: