×

காரியாபட்டி அருகே பேட்டரி தெளிப்பான் குறித்து செயல்விளக்கம்

காரியாபட்டி: காரியாபட்டி வட்டார வேளா ண்மை துறை அதிகாரிகள் மூலம் திருவில்லிபுத்தூர் அருகே கலசலிங்கம் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை கல்லூரியின் இறுதி ஆண்டு இளநிலை வேளாண்மை துறை மாணவர்கள் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று வருகின்றனர்.
காரியாபட்டி அருகே முஷ்டக்குறிச்சியில் வேளாண்மை உதவி இயக்குனர் செல்வராணி, வேளாண்மை அலுவலர் முருகேசன், வேளாண்மை உதவி அலுவலர் ஆனந்த்ராஜ், வட்டார தொழில்நுட்ப மேலாளர் ராஜேஷ், உதவி வட்டார தொழில்நுட்ப மேலாளர் வீரபாண்டி, பேராசிரியர் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் விவசாய தொழில்நுட்ப மேலாண்மை முகாம் செயல் விளக்கத்திடல் திட்டத்தின் கீழ் இறுதி ஆண்டு இளநிலை வேளாண்மை துறை மாணவர்கள் சிவநந்தா, சீனிவாசன், வீரமணிதங்கம், ஶ்ரீராம், அருண் குமார், ஜெயராம், கருப்புச்சாமி ஆகியோர் விவசாயிகளுக்கு பேட்டரி தெளிப்பான் பற்றிய பயன்களையும் முக்கியத்துவத்தையும் விவசாய நிலத்தில் செயல் விளக்கத்துடன் எடுத்துரைத்தனர்.

Tags : Kariyapatti ,
× RELATED நீரில் மூழ்கி பள்ளி மாணவர் பலி