×

மாநில சிலம்ப போட்டியில் அருப்புக்கோட்டை மாணவன் சாதனை

அருப்புக்கோட்டை: தமிழ்நாடு அமெச்சூர் சிலம்பம் அசோசியேசன் சார்பில் மாநில அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஜீனியர், சீனியர் பிரிவுகளில் சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி கன்னியாகுமரி சிஎஸ்ஐ ஹாலில் நடைபெற்றது. இதில் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை எஸ்.பி.கே ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 8ம் வகுப்பு மாணவர் எஸ்.விஜயன் ஜூனியர் பிரிவில், 14 வயதிற்குட்பட்டோர் ஒற்றைச்சுருள் போட்டியில் விளையாடி மூன்றாம் இடத்தை பிடித்து வெண்கலப் பதக்கம் பெற்றார் மாநில அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் மூன்றாம் பரிசு வென்று பள்ளிக்குப்பெருமை சேர்த்த மாணவர் விஜயனையும், அவரது வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பள்ளி உடற்கல்வி இயக்குநர் செளந்தரபாண்டியன் மற்றும் உடற்கல்விஆசிரியர்களை நாடார் உறவின்முறை தலைவர் சுதாகர், பள்ளி செயலாளர் காசிமுருகன், பள்ளித்தலைவர் ஜெயகணேசன், தலைமை ஆசிரியர் ஆனந்தராஜன் ஆகியோர் பாராட்டினர்.

Tags : Aruppukottai ,
× RELATED மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா அருப்புக்கோட்டையில் இன்று அன்னதானம்