×

வேங்கடமங்கலம் ஊராட்சிக்கு ரூ.22.50 லட்சம் மதிப்பில் 3 டிராக்டர், டேங்கர் லாரி: ஒன்றியக்குழு தலைவர் வழங்கினார்

கூடுவாஞ்சேரி: காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வேங்கடமங்கலம் ஊராட்சியில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், ₹22.50 லட்சம் மதிப்பீட்டில் 3 டிராக்டர்கள் மற்றும் குடிநீர் டேங்கர் லாரி வழங்கும் நிகழ்ச்சி, ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடந்தது. ஊராட்சி தலைவர் கல்யாணி ரவி தலைமை வகித்தார். துணை தலைவர் சந்திரன், வார்டு உறுப்பினர்கள் விஜயகுமார், சத்யா துளசிங்கம், புஷ்பா நாகராஜன், பொன்னம்மாள் சண்முகசுந்தரம், பெருமாள் கவுதமி மாரிமுத்து, குமுதாசாமி, அன்பரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஊராட்சி செயலர் லீமா ரோஸ்லின் எபினேசர் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக காட்டாங்கொளத்தூர் ஒன்றியக்குழு தலைவர் உதயா கருணாகரன், மாவட்ட திட்ட உதவி இயக்குனர் ஆனந்தன், மாவட்ட கவுன்சிலர் ரத்தினமங்கலம் கஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு, மக்கும் குப்பை, மக்காத குப்பை ஆகியவற்றை தரம் பிரித்து பெறுவதற்காக 3 டிராக்டர்கள், தங்கு தடையின்றி குடிநீர் வழங்குவதற்காக டேங்கர் லாரி ஆகியவற்றை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதில், பி.டி.ஓ.,க்கள் வெங்கட்ராகவன், சாய்கிருஷ்ணன், துணை அலுவலர் பிரேமலதா, முன்னாள் ஊராட்சி தலைவர் சோ.ஆறுமுகம் உட்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில், முன்னாள் ஊராட்சி தலைவர் ரவி நன்றி கூறினார்.

Tags : Venkatamangalam ,Panchayat ,Union Committee ,
× RELATED ஆதிச்சமங்களம் ஊராட்சியில் புதிய மின்மாற்றி அமைப்பு