கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில் உலக ஈர நில நாள் விழா

நெல்லை, பிப்.7: உலகம்  முழுவதும் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் ஈர நில நாள் கொண்டாடப்பட்டு  வருகிறது. இதையொட்டி நெல்லை மாவட்டம் கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில்  உலக ஈர நில நாள் விழா கொண்டாடப்பட்டது. களக்காடு-முண்டந்துறை புலிகள்  காப்பக கள இயக்குனர் செந்தில்குமார் அறிவுரையின்படி இவ்விழா நடந்தது. நெல்லை மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரின காப்பாளர் முருகன்  தலைமை  வகித்தார். களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பக சூழல் மேம்பாட்டு அலுவலர்  அள்பு, ஈர நிலங்கள் பற்றியும், அவற்றை பாதுகாப்பதன் அவசியம் பற்றியும்  விளக்கி கூறினார். நிகழ்ச்சியில் கடம்பன்குளம் அரசு ஆதிதிராவிடர் நல  மேல்நிலைப்பள்ளி மற்றும் மருதகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு கூந்தன்குளம் பறவைகள்  சரணாலயத்தில் உள்ள பறவைகளை அடையாளம் காண்பது குறித்து பயிற்சி  அளிக்கப்பட்டது. விழாவில் தலைமை ஆசிரியர்கள் பொன்னையா,  சுந்தரம் ஆசிரியர்கள் பிரபு, ராஜம் மற்றும் ஊர் பொதுமக்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை நெல்லை வனச்சரக அலுவலர் கருப்பையா, வனவர் அழகர்ராஜ்  மற்றும் மதிவாணன் ஆகியோர்   செய்திருந்தனர்.

Related Stories: