×

கோவில்பட்டியில் 97வது பிறந்தநாள் விழா நாராயணசாமி நாயுடு படத்திற்கு மரியாதை

கோவில்பட்டி, பிப். 7: கோவில்பட்டியில் நாராயணசாமி நாயுடுவின் 97வது பிறந்தநாளையொட்டி அவரது படத்திற்கு தமிழ்  விவசாயிகள் சங்கத்தினர் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர். உழவர்  பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் 97வது பிறந்தநாள் விழா கோவில்பட்டியில் நடந்தது. கோவில்பட்டி  கிருஷ்ணா மண்டபத்தில் நடந்த இவ்விழாவிற்கு தமிழ் விவசாயிகள் சங்கத்தின் நாராயணசாமி தலைமை  வகித்தார். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற கோவில்பட்டி கோட்டாட்சியர் சங்கரநாராயணன், நாராயணசாமி படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினார்.  இதில் சங்கத்தின்  மாவட்டத் தலைவர் நடராஜன், ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ், மாவட்ட துணைத்தலைவர்  சாமியா, அவைத்தலைவர் வெங்கடசாமி, செங்கோட்டை வேலுச்சாமி, மாவட்ட அமைப்பாளர்  கனகராஜ் மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : Kovilpatti ,Narayanasamy Naidu ,
× RELATED கோவில்பட்டியில் வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு..!!