×

அமமுக மாவட்ட செயலாளர் எஸ்.காமராஜ் இல்ல திருமணம்

மன்னார்குடி, பிப். 7: திருவாரூர் மாவட்ட அமமுக மாவட்ட செயலாளர் எஸ். காமராஜ்  விஜயலெட்சுமி தம்பதியரின் மகள் டாக்டர் தரணிக்கும், தஞ்சை மாவட்டம் ஒக்க நாடு கீழையூர், சாம்பமூர்த்தி, ராஜேஸ்வரி தம்பதியரின் மகன் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி டாக்டர் துளசி அய்யாவிற்கும் தஞ்சை மஹாராஜா மஹாலில் நேற்று காலை திருமணம் வெகு விமரிசையாக நடந்தது. விழாவிற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமை வகி த்து திருமாங்கல்யம் எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்து மண மக்களை வாழ்த்தினார். விழாவில், அண்ணா திராவிடர் கழக பொதுச்செயலாளர் டாக்டர் திவாகரன், முன்னாள் உணவு துறை அமைச்சர் காமராஜ் எம்எல்ஏ, அமமுக துணை பொதுச்செயலாளர் தஞ்சை ரெங்கசாமி, அமமுக மாநில பொருளாளர் மனோகரன், தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பிஆர் பாண்டி யன், அதிமுக மாநில அமைப்பு செயலாளர் சிவா ராஜமாணிக்கம், திருச்சி முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான், முன்னாள் எம்பி பரசுராமன், அமமுக திருவாரூர் மாவட்ட துணை செயலாளர் வழக்கறிஞர் சரவனச் செல் வன், மன்னை மேற்கு ஒன்றிய துணைச்செயலாளர்கள் சோ.ப. தமிழ்வா ணன், எஸ்டிஎஸ் அரசு, நீடா பேரூராட்சி செயலாளர் சங்கர் மற்றும் முன் னாள், இந்நாள் எம்பிக்கள், எம்எல்ஏக்கள், காவல்துறை, நெடுஞ்சாலை துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளை சார்ந்த உயரதிகாரிகள் மற்றும் அமமுகவை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகள், பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். திருமணத்திற்கு வந்திருந்த அனைவரையும் அமமுக மாவட்ட செயலாளர் எஸ். காமராஜ், விஜயலெட்சுமி காமராஜ், டாக்டர் ஜெயப்பிரியா, டாக்டர் ஜெ யேந்திரன், தரணி பள்ளி நிர்வாகி இளயராஜா, ரவி ராஜளியார், ஆசிரியர் அசோகன் மற்றும் தரணி குழுமங்களின் பணியாளர்கள், அலுவலர்கள் மற்றும் இரு தரப்பை சேர்ந்த திருமண வீட்டார் வரவேற்றனர்.

Tags : Amukha ,District ,S. Kamaraj ,
× RELATED பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதியில்...