×

நீடாமங்கலம் உயிர் உர உற்பத்தி மையத்தில் நடப்பு ஆண்டிலிருந்து திரவ உயிர் உரங்கள் உற்பத்தி விவசாயிகளுக்கு 50% மான்யத்தில் விற்பனை

மன்னார்குடி, பிப். 7: தமிழ்நாடு அரசு வேளாண்மை துறை மற்றும் உழவர் நலத்துறை திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் செயல்பட்டு வரும் உயிர் உர உற்பத்தி மையத் தில் நடப்பு ஆண்டிலிருந்நு திரவ உயிர்உரங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருவதாக வேளாண் உதவி இயக்குநர் சாருமதி மற்றும் உயிர்உர உற்பத்திமைய வேளாண்மை அலுவலர் மீனா ஆகியோர் தெரிவித்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் நீடா வட்டார வேளாண் உதவி இயக்குநர் சாருமதி மற்றும் உயிர் உர உற்பத்தி மைய வேளாண்மை அலுவலர் மீனா ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இயற்கையிலேயே கிடைக்க கூடிய தழை, மணிமற்றும் சாம்பல் சத்துக்களை மண்ணிலிருந்தும், வளிமண்டலத்திலிருந்தும், பயிருக்கு கிடைக்கச் செய்யும் வேலையை உயிர் உரங்கள் செய்கின்றன. தழைச்சத்துக்கு அசோஸ்பைரில்லம் மற்றும் ரைசோ பியம் உயிர் உரங்களும், மணிசத்துக்கு பாஸ்போ பாக்டீரியா உயிர் உரத்தை யும் மற்றும் சாம்பல் சத்துக்கு பொட்டாஷ் மொபி லைசிங் பாக்டீரியா உயிர் உரத்தையும் பயன்படுத்தலாம்.

இம்மையத்தில் அசோஸ்பைரில்லம் (நெல்), அசோஸ்பைரில்லம் (இதரபயிர் கள்), ரைசோபியம் (பயறு), ரைசோபியம் (கடலை), பாஸ்போ பாக்டீரியா, பொட்டாஷ் மொபிலைசிங் பாக்டீரியா, அசோபாஸ் (நெல்), அசோபாஸ் (இதர பயிர்கள்) என்று மொத்தம் எட்டு வகை யான திரவ உயிர் உரங்கள் வருடத் திற்கு 50 ஆயிரம் லிட்டர் உற்பத்தி செய்யப் படுகிறது. இந்த உயிர் உரங் களை விதை நேர்த்தியாகவும், நாற்றாங்காலிலும், நடவு வயலிலும், சொட்டு நீர் பாசனத்திலும் பயன்படுத்தலாம் இந்த உயிர் உரங்களை நெல், பச்சைபயிறு, நிலக்கடலை கரும்பு, மக்காச் சோளம், எள், பருத்தி, உளுந்து, தென்ணை போன்ற பயிர்களுக்கும், காய்கறி பயிர்களு க்கும், வீட்டுத் தோட்ட காய்கறி செடிகள், மாடித் தோட்ட காய்கறி செடிகள், ரோஜா, மல்லிகை, முல்லை, சாமந்தி போன்ற மலர் செடிகளுக்கும், வாழை, மா, கொய்யா, பலா, மாதுளை போன்ற பழப் பயிர்களுக்கும், இய ற்கை உரமாக பயன் படுத்துவதால் இராசயான உரங்கள் பயன்பாட்டை குறைத்து உடல் நலத்தையும், சுற்றுச் சூழலையும் பாதுகாக்கலாம். இந்த உயிர் உரங்கள் திருவாரூர் மாவட்டத்தில் நீடாமங்கலம் வட்டராத்தில் திரவஉயிர் உர உற்பத்தி மையத்தில் உற்பத்தி செய்யப் பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைக்கப் பட்டு விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியம் விலையில் விற்கப்படுகிறது. இதன் விலை 500 மி.லி பாட்டீல் ஓன்று ரூ.150 மட்டுமே. இதனை 50 சதவீதம் மானியத்தில் வேளாண்மை விரிவாக்க மையங்களில் பெறலாம். இவ்வாறு, அவர்கள் ெதரிவித்தனர்.

Tags : Needamangalam Bio-Fertilizer Production Center ,
× RELATED திருச்சியில் இருந்து கரூர் வரை...