மணப்பாறை அருகே மகள் நினைவு நாள் நிகழ்ச்சிக்கு வந்தவர் மழைநீரில் மர்ம சடலம்

துவரங்குறிச்சி, பிப். 7: திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்தவர் குழந்தைசாமி(59). இவர் தனது மகளின் முதலாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கருங்குளம் வந்துள்ளார். இந்நிலையில் அவர் மணப்பாறை மஞ்சம்பட்டி ரயில்வே மேம்பால சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள மழைநீரில் மூழ்கி சடலமாக கிடந்துள்ளார். தகவல் அறிந்த மணப்பாறை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: