வத்திராயிருப்பு அருகே கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்

வத்திராயிருப்பு, பிப். 5: வத்திராயிருப்பு அருகே தம்பிபட்டியில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. ஊராட்சி மன்றத்தலைவர் முனியம்மாள் முகாமை தொடங்கி வைத்தார். கால்நடை பராமரிப்புத்துறை விருதுநகர் இயக்குநர் ரவிச்சந்திரன், துணை இயக்குநர் கோபால்ராஜா, உதவி இயக்குநர் ராஜராஜேஸ்வரி முன்னிலை வகித்தனர். கோட்டையூர் கால்நடை மருத்துவர் கருப்பசாமி தலைமையிலான மருத்துவக்குழு 982 கால்நடைகளுக்கு இலவச சிகிச்சையளித்தது.

கிடேரி கன்றுகளை சிறப்பாக வளர்த்திருந்த மூன்று விவசாயிகளுக்கும், கால்நடை வளர்ப்பில் சிறந்த நடைமுறைகளை பின்பற்றிய மூன்று விவசாயிகளுக்கும் பரிசு வழங்கப்பட்ட. முகாமில் கால்நடை உதவி மருத்துவர் ஆதீஸ்வரன், கால்நடை ஆய்வாளர்கள் ராஜீ, ராஜேஸ்வரி, கால்நடைப் பராமரிப்பு உதவியாளர்கள் வீரகுமார், கலைச்செல்வி கலந்து கொண்டனர்.

Related Stories: