×

கன்னிவாடி பேரூராட்சியில் திமுக, கூட்டணி கட்சியினர் வேட்புமனு தாக்கல்

சின்னாளபட்டி, பிப். 5: கன்னிவாடி பேரூராட்சியில் 15வார்டுகள் உள்ளன. இதில் 1 மற்றும் 10வது வார்டு சி.பி.எம் வேட்பாளர்களும், 2, மற்றும் 13வது வார்டில் காங்கிரஸ் வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். மீதமுள்ள 11 வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். நேற்று கோட்டை கருப்பணசாமி கோயிலிருந்து திமுக, சி.பி.எம்., காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் ஊர்வலமாக வந்து ஒன்றிய பெருந்தலைவர் ப.க.சிவகுருசாமி, முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் கு.சத்தியமூர்த்தி, பேரூர்கழக செயலாளர் வழக்கறிஞர் சண்முகம், சி.பி.எம். ஒன்றிய செயலாளர் சக்திவேல் தலைமையில் வேட்பு மனுதாக்கல் செய்தனர்.

இதில் 1வது வார்டில் மணிமாலதி, 10ல் அப்துல் ஹக்கிம், 2ல் மருதையம்மாள், 13ல் கீதா, 3ல் ஜி.பாப்பாத்தி, 4ல் ஏ.பெருமாள், 5ல் பூமிபாலன், 6ல் பிச்சைமுத்து, 7ல் முன்னாள் பேரூராட்சித்தலைவர் எஸ்.தனலெட்சுமி, 8ல் டி.சர்புதீன், 9ல் சித்ரா, 11ல் பொதுக்குழு உறுப்பினர் இளங்கோவன், 12ல் உமாஇந்திராகாந்தி, 14ல் கார்த்திகைசெல்வி, 15ல் சரண்யா ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இந்நிகழ்வின்போது, காங்கிரஸ் வட்டாரத் தலைவர் முருகானந்தம், கன்னிவாடி காங்கிரஸ் தலைவர் சேவியர், த.மு.மு.க கட்சியை சேர்ந்த ஷாஜகான், புதுப்பட்டி ஊராட்சித் தலைவர் அருணாச்சலம், கன்னிவாடி பேரூர் கழக இளைஞர் அணி கோபி, புதுப்பட்டி திமுக நிர்வாகி உதயக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,Kanniwadi ,
× RELATED கன்னிவாடி சந்தையில் ஆடுகளுக்கு போதிய...