×
Saravana Stores

கொள்ளிடம் அடுத்த சந்தப்படுகை அம்மன் கோயில் கும்பாபிஷேகத்திற்காக தர்ப்பைப்புல் கயிறு திரிக்கும் பணி தீவிரம்

கொள்ளிடம், பிப்.5: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே சந்தப்படுகை கிராமத்தில் சாந்த முத்துமாரியம்மன் ஆலயம் உள்ளது. இக்கோயிலின் கும்பாபிஷேகம் வரும் 7ம் தேதி காலை நடைபெறுகிறது. அங்குள்ள மற்ற பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு தர்ப்பைப் புல்லைக் கொண்டு நேற்று கயிறு தயாரிக்கும் பணி நடைபெற்றது. இதுகுறித்து கோயில் கும்பாபிஷேக பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் சிவாச்சாரியார்கள் கூறுகையில், தருப்பைப்புல் புண்ணியபூமி தவிர வேறு எங்கும் வளராது.இதற்கு அக்னிகற்பம் என்ற பெயரும் உண்டு. பலநாட்கள் இருந்தாலும் அழுகாது.தாமிரம் இதில் நிறைந்துள்ளதால் மின்சக்தி மற்றும் பிரபஞ்ச சக்தியை கடத்த கூடிய தன்மைவாய்ந்ததாகும். யாக சாலைகளில் மந்திர ஒலிகளை கடத்தி சக்தி அளிக்கும். யாககுண்டத்தில் நான்கு பக்கங்களிலும் தருப்பைபுல் வைப்பது அந்த குண்டங்களை பாதுகாக்கும் அரணாக இருக்கும் என்பதற்காகவே இது பயன்படுத்தப்படுகிறது. தர்ப்பைப்புல் உஷ்ண வீரியமும், சக்தியும் கொண்டது. ரிக் வேதம் கம்பராமாயணம், பெரும்பாணாற்றுப்படை, சிலப்பதிகாரம் ஆகியவைகளில் தருப்பைப்புல் பற்றிய குறிப்பிடப்பட்டுள்ளது. தருப்பைப்புல் வயிற்று பிரச்சனை மற்றும் மாதவிடாய் பிரச்னைகளை குணப்படுத்தக் கூடிய சிறந்த மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. தருப்பைப்புல் யுனானி, சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருத்துவத்திலும் சிறந்த மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. கோயில்களில் யாகக்குண்டத்தில் உள்ளமந்திர ஒலிகளின் சக்தியை கடத்தி சென்று ஆலயத்திற்கு சக்தியை ஊட்ட இது பயன்படுகிறது என்றனர்.
 திமுக,அதிமுக,பாமக வேட்பாளர்கள் மனு தாக்கல்


Tags : Chandapatukai Amman Temple ,Kolli ,
× RELATED குடியிருப்பு கிராமப் பகுதிகள் வன நிலமாக அறிவிப்பு