×

அருப்புக்கோட்டையில் அண்ணா சிலைக்கு அமைச்சர் மரியாதை

அருப்புக்கோட்டை: அறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் மாலையணிவித்தார். தமிழக முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு அருப்புக்கோட்டை நகர ஒன்றிய திமுக சார்பில் அண்ணா சிலைக்கு அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ விஜயக்குமார், முன்னாள் நகர்மன்ற தலைவர் சிவப்பிரகாசம், முன்னாள் ஒன்றிய சேர்மன் சுப்பாராஜ், நகர திமுக செயலாளர் மணி, ஒன்றிய செயலாளர்கள் பாலகணேஷ், பொன்ராஜ், மிசா கந்தசாமி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாபுஜி, நகர துணைச்செயலாளர் ஆசைத்தம்பி, மாநில நெசவாளர் அணி செயலாளர் பழனிச்சாமி, திமுக பிரமுகர் சிவசங்கரன், நகர அவைத்தலைவர் கணேசன், மாவட்ட ஆதிதிராவிட அணி அமைப்பாளர் சோலையப்பன் கலந்து கொண்டனர்.

Tags : Minister ,Anna ,Aruppukottai ,
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சமத்துவ நாள் உறுதி மொழி ஏற்பு!