கும்மிடிப்பூண்டியில் அண்ணாவின் 53வது நினைவு நாள்: ஒன்றிய பொறுப்பாளர் மலர்தூவி மரியாதை

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில் பேரறிஞர் அண்ணாவின் 53வது நினைவு தினத்தில் திமுகவினர் அவரது திருஉருவ சிலைக்கு மலர் தூவியும்,  மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினர். பேரறிஞர் அண்ணாவின் 53ம் நினைவு நாள் திமுகவினரால் கும்மிடிப்பூண்டி பஜாரில்  உள்ள அவரது திருஉருவ சிலைக்கு மலர் தூவியும்,  மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் கி.வே.ஆனந்தகுமார், நகர செயலாளர் அறிவழகன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

இதில்,  திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே.வி.ஜி.உமா மகேஷ்வரி, கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் மு.மணிபாலன், பொதுக்குழு உறுப்பினர் பா.செ.குணசேகர், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் பாஸ்கரன், மாவட்ட கவுன்சிலர்கள் சாரதம்மா முத்துசாமி, ராமஜெயம்,  இலக்கிய அணி பொருளாளர் ஜோதிலிங்கம், ஒன்றிய கவுன்சிலர்கள் ஜோதி, அமலா சரவணன்  மாவட்ட பிரதிநிதி இஸ்மாயில், துணைத் செயலாளர் வெங்கடேசன் முன்னிலை வகித்தனர்.மேலும்,  நிகழ்வை ஒட்டி கும்மிடிப்பூண்டி பேரூராட்சி தேர்தலில் வேட்பாளர்களாக நிற்கும் 14 திமுக வேட்பாளர்களும் தேர்தலில் திமுக வெற்றிக்கு உழைப்போம் என அண்ணாவின் சிலைக்கு முன் உறுதி ஏற்றனர்.

இந்நிகழ்வில், திமுக நகர நிர்வாகிகள் கே.என்.பாஸ்கர், கருணாகரன், அக்கீம், காளிதாஸ், டி.ஆர்.ராஜா, வெங்கடேசன், முனியாண்டி , தொண்டரணி மாவட்ட அமைப்பாளர் முத்துகுமரன் , தலைமை கழக பேச்சாளர் தமிழ்சாதிக்,  அர்ச்சுனன், இளைஞர் அணி அமைப்பாளர் சாண்டில்யன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories: