×

கும்பகோணத்தில் ஓய்வூதியர் சங்க கொடியேற்று விழா

கும்பகோணம், பிப்.4: கும்பகோணத்தில் ஓய்வூதியர் சங்க 9ம் ஆண்டு அமைப்பு தினத்தை முன்னிட்டு குடந்தை கர்ணக்கொல்லை வடக்கு தெருவிலுள்ள அனைத்து துறை ஓய்வூதியர் சங்க அலுவலகத்தில் சங்க அமைப்பு தினம் சங்க கொடியேற்றத்துடன் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வட்ட தலைவர் துரைராஜ் தலைமை வகித்தார். மருந்தாளுநர் சங்க மாநில பொருளாளர் விஸ்வேஷ்வரன், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பாக்கியநாதன், கிராம பணியாளர்கள் ஓய்வூதியர் சங்க ராமதாஸ், ஓய்வூதியர் சங்க மாவட்ட துணை தலைவர் பழ.அன்புமணி, வட்ட செயலாளர் பக்கிரிசாமி, பொருளாளர் ராமமூர்த்தி மற்றும் ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Pensioners' Association ,Kumbakonam ,
× RELATED ஓய்வூதியர்கள் சங்க பேரவை கூட்டம்