×

பிசானத்தூரில் கால்நடை மருத்துவ முகாம்

கந்தர்வகோட்டை, பிப்.4: கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், பிசானத்தூர் ஊராட்சியில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் பிரபாகரன் தலைமை வகித்தார். துணை தலைவர் ரவி முன்னிலை வகித்தார், முகாமில் கால்நடை உதவி மருத்துவர்கள் செந்தில், ராஜன், தினேஷ்குமார், பிரசாத், கால்நடை ஆய்வாளர்கள் மாட்டின்ராஜ் , அன்னக்கிளி, கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் ரங்கசாமி , ரங்கம்மாள் , மாரியம்மாள் உள்ளிட்ட குழுவினர் கலந்துகொண்டு 450க்கும் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடுதல், குடற்புழு நீக்கம், செயற்கை முறை கருவூட்டல், சினைப் பரிசோதனை மற்றும் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சைகளை வழங்கினார். முகாமில் சிறந்த முறையில் வளர்க்கப்பட்ட கன்றுகளுக்கும், விவசாயிகளுக்கும் விருது மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஊராட்சி செயலாளர் ரமேஷ்குமார் செய்திருந்தார் .

Tags : Veterinary Camp ,Pisanathur ,
× RELATED காணியம்பாக்கம் ஊராட்சியில் கால்நடை...