×

திமுக வேட்பாளர்கள் மனு தாக்கல் சிபிசிஎல் நிறுவனத்தால் பாதிக்கப்படும் நில உரிமையாளர்கள் வாரிசுகளுக்கு பணி வழங்க கோரி உண்ணாவிரத போராட்டம்

நாகை, பிப்.4: நாகை மாவட்டம் பனங்குடி கிராமத்தில் 1992ம் ஆண்டு தொடங்கப்பட்டு பொதுத்துறை நிறுவனமான சென்னை பெட்ரோல் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் தொடங்கப்பட்டது. இதை தொடர்ந்து விரிவாக்க பணிகளை தொடங்கி உள்ளது. 618 ஏக்கர் பரப்பளவில், ரூ.38 ஆயிரம் கோடி செலவில் செயல்படுத்த உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு விரிவாக்க பணிகளுக்கு சிபிசிஎல் நிலம் கையகப்படுத்தியது. இதற்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்கவில்லையாம். இதையடுத்து நிலத்தின் உரிமையாளர்களுக்கு உரிய தொகை வழங்க வலியுறுத்தி அப்பகுதி விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில் சிபிசிஎல் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட்ட விவசாய நில உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் மறுவாழ்வு நல சங்கம் சார்பில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் சிபிசிஎல்ஆலை விரிவாக்கத்திற்காக தங்களது விளைநிலங்களை இழக்கும், விவசாயிகளுக்கு ஓராண்டுக்கு முன் முட்டம் கிராமத்திற்கு அரசால் வழங்கப்பட்ட நியாயமான இழப்பீட்டை வழங்கிட வேண்டும். சிபிசிஎல்நிறுவனத்தால் பாதிக்கப்படும் நில உரிமையாளர்கள் மற்றும் சாகுபடிதாரர்களின் வாரிசுகளுக்கு தகுதி அடிப்படையில் நிரந்தர பணிக்கு உத்திரவாதம் வழங்க வேண்டும். விவசாய சாகுபடிதாரர் மற்றும் அனைத்து விவசாய கூலி தொழிலாளர்கள், விவசாயம் சார்ந்த தொழில் செய்பவர்களுக்கும் மாற்று வாழ்வாதாரத்தை உறுதிபடுத்திட வேண்டும். சிபிசிஎல்நிறுவனம் சுற்றியுள்ள பனங்குடி, கோபுராஜபுரம், நரிமணம், உத்தமசோழபுறம், குத்தாலம், முட்டம் ஊராட்சிகளை சர்ந்த பொதுமக்களை பாதிக்காத வகையில் கழிவு மேலாண்மை, மாசுக் கட்டுப்பாடு, வாழ்வதற்கு ஏற்ற சுற்றுச்சூழல், குடிநீர் ஆதாரம் ஆகியவற்றுக்கான பாதுகாப்பை வெளிப்படைத் தன்மையோடு உறுதி செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கையைக வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

Tags : DMK ,CBCL ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி