×

மண்டைக்காடு கோயிலில் ₹19 லட்சம் காணிக்கை வசூல்

குளச்சல், பிப்.4: மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் ₹19 லட்சம் உண்டியல் மூலம் காணிக்கை வசூலானது. மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ள  16 உண்டியல்கள் நேற்று குமரி மாவட்ட திருக்கோயில்களின் இணை ஆணையர் ஞானசேகர், உதவி ஆணையர்(பொறுப்பு) கண்ணதாசன், பத்மனாபபுரம் தேவஸ்வம் தொகுதி கண்காணிப்பாளர் செந்தில்குமார், ஆய்வாளர் செல்வி, கோயில் காரியம் ஆறுமுகநயினார், மராமத்து பொறியாளர் ஐயப்பன் ஆகியோர் முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டன. சுய உதவிக்குழு பெண்கள், கோயில் பணியாளர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.எண்ணிக்கை முடிவில் ₹19,14,166 ரொக்கம், 145 கிராம் தங்கம், 420 கிராம் வெள்ளி மற்றும் வெளிநாட்டு நாணயங்களும் கிடைக்கப்பெற்றன.

Tags : Mandaikadu temple ,
× RELATED மண்டைக்காடு கோயில் விழா குமரிக்கு 9ம்தேதி உள்ளூர் விடுமுறை