×

மேலப்பாளையம் மண்டலத்தில் நேற்று 15 பேர் வேட்புமனு தாக்கல்

நெல்லை, பிப். 3: நெல்லை மாநகராட்சி தேர்தலில் மேலப்பாளையம் மண்டலத்தில் நேற்று மட்டும் 15 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். நெல்லை மாநகராட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜன.28ம் தேதி தொடங்கியது. மேலப்பாளையம் மண்டலத்தில் உள்ள 16 வார்டுகளுக்கு ஜன.28,29 மற்றும் பிப்.1 ஆகிய மூன்று தினங்களில் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. வேட்புமனு தாக்கல் 3ம் நாளான ஜன.31ம் தேதி மக்கள்நீதி மய்யம் கட்சி வேட்பாளர் ஒருவர், சுயேட்சைகள் இருவர் என 3 பேர் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்தனர். 5ம் நாளான நேற்று மட்டும் எஸ்டிபிஐ கட்சியினர் 4 பேர், நாம்தமிழர் கட்சியினர் 3 பேர், தேமுதிக சார்பில் ஒருவர், சுயேட்சைகள் 7 பேர் என மொத்தம் 15பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

நெல்லை மாநகராட்சியில் மொத்தம் உள்ள 55 வார்டுகளில் அதிகபட்சமாக 16 வார்டுகளைக் கொண்டுள்ள மேலப்பாளையம் மண்டலத்தில் வேட்புமனு தாக்கலுக்கான 5 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இதுவரையில் 18 பேர் மட்டுமே மனு தாக்கல் செய்துள்ளனர். இதில் 40,41,48,49,53,54 ஆகிய வார்டுகளில் தலா ஒருவர் வீதம் 6 பேரும், 43,46 ஆகிய வார்டுகளில் தலா 2 பேர் வீதம் 4 பேரும், 44வது வார்டில் 3 பேரும், 50வது வார்டில் அதிகபட்சமாக 5 பேர் என மொத்தம் 18 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மேலும் இங்குள்ள 31,42,45,47,51,52 ஆகிய 6 வார்டுகளில் இதுவரை எந்த ஒரு வேட்புமனுவும் தாக்கல் செய்யப்படவில்லை. வேட்புமனு தாக்கலுக்கு இன்றும், நாளையும் என இரு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் திமுக, அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் இந்த 2 நாட்களில் கூடுதலான வேட்புமனுக்கள் தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Upper Palaiyam ,
× RELATED பொங்கல் விற்பனை களை கட்டியது...