×

கரூர் வாங்கல் சாலையில் குப்பைகள் ெகாட்டப்படுவதால் கடும் சுகாதார சீர்கேடு

கரூர், பிப். 3: கரூர் வாங்கல் சாலையில் குப்பைகள் கொட்டப்படுவதால் கடும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. கரூரில் இருந்து நாமக்கல், மோகனூர் மற்றும் வாங்கல் போன்ற பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் அரசு காலனி வழியாக செல்லும் வாங்கல் சாலையில் சென்று வருகின்றன. வாங்கல் சாலையில் ஏற்கனவே, குப்பை கிடங்கு அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில், ஒரு சிலர், கோழிக்கழிவுகள் உட்பட பல்வேறு கழிவுகளை இரவு நேரத்தில் வாகனங்களில் கொண்டு வந்து சாலையோரம் கொட்டி விட்டு செல்கின்றனர்.இதன் காரணமாக வாங்கல் சாலையின் குறிப்பிட்ட தூரம் கடும் துர்நாற்றம் ஏற்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை நிலவி வருகிறது. கழிவுகள் கொட்டப்படுவதால் அருகில் குடியிருக்கும் பொதுமக்களும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, கரூர் வாங்கல் சாலையில் கொட்டப்படும் கழிவுகள் குறித்து கண்காணித்து தேவையான ஏற்பாடுகளை துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Karur Vangal Road ,
× RELATED கரூர் வாங்கல் சாலை அரசு காலணியில் உள்ள குப்பை கிடங்கில் தீ விபத்து!