×

குத்தாலம் அருகே 3 ஊராட்சிக்கான செம்மண் சாலை தரம் உயர்த்தப்படுமா?

குத்தாலம், பிப்.3: குத்தாலம் அருகே உள்ளது பெரம்பூர் கிராமம். இந்த கிராமத்திற்கிடையே செல்லும் வீரசோழனாற்றின் குறுக்கே நடைபாலம் வழியாக வடக்கே சென்றால் பெரம்பூர் மேட்டுத் தெருவை சேரலாம். மேட்டுத்தெரு வடக்கு தெற்காக அமைந்து 300.மீ தூரம் சென்று வல்லம் சாலையை அடைகிறது. மேட்டுத்தெருவின் சாலையின் இரண்டு பக்கங்களும் 3 ஊராட்சிகளுக்கு சொந்தமானது. சாலையின் மேல்புறம் 2 ஊராட்சிகளுக்கும், கிழக்குபுறம் ஒரு ஊராட்சிக்கும் சொந்தமானதாகும். இந்த 300.மீ சாலையின் மேல்புறம் 150.மீ வரை பெரம்பூர் ஊராட்சிக்கும், மீதமுள்ள 150‌.மீவரை கிளியனூர் ஊராட்சிக்கும் சொந்தமானது. மேட்டுத்தெருவின் கிழக்குப்புறம் கொடைவிளாகம் ஊராட்சியை சேர்ந்தது.

ஆயிரக்கணக்கான மக்கள் ஏரலாச்சேரி, வடுவச்சூர், கிளியனூர், கொடைவிளாகம், கடக்கம் போன்ற பகுதிகளிலிருந்து மேட்டுத்தெரு வழியாக சென்றுதான் பெரம்பூர் கடைவீதியைக அடைந்து அங்கு தேவையான பொருட்களை வாங்க வேண்டும். இந்த சாலை இதுவரை தார்வாசனையை கண்டதில்லை. கடந்த ஆட்சியில் அப்பகுதி மக்கள் பல்வேறு ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை நடத்தி பின்னர் செம்மண் சாலையை போட்டனர். செம்மண் சாலை போடப்பட்டு ஒன்றரை வருடங்கள் ஆகியும் இன்னும் தார்சாலை அமைக்கவில்லை. எனவே அந்த சாலையை ஓரடுக்கு கப்பி மற்றும் தார்சாலையாக மாற்றி அமைத்து தருமாறு அப்பகுதி வழியாக செல்லும் பாதசாரிகள், ஓட்டுனர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags : Kuthalam ,
× RELATED கோமல் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாடி...