பொதுமக்கள் எதிர்பார்ப்பு நாகை பிடிஓ பொறுப்பேற்பு

நாகை,பிப்.3: நாகை வட்டார வளர்ச்சி அலுவலராக ரேவதி நேற்று பொறுப்பேற்றார். நாகை வட்டார வளர்ச்சி அலுவலராக அண்ணாதுரை பணியாற்றி வந்தார். இவர் வேதாரண்யம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதை தொடர்ந்து நாகை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (தணிக்கை) யாக பணியாற்றிய ரேவதி நேற்று நாகை வட்டார வளர்ச்சி அலுவலராக பொறுப்பேற்றார். இவரை நாகை வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர்கள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Related Stories: