கறம்பக்குடி அருகே வாலிபர் மாயம்: தந்தை புகார்

கறம்பக்குடி, பிப்.3: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பல்லவராயன்பத்தை அருகே ஆதியடிப்பட்டி கிழக்கு பகுதியை சேர்ந்தவர் வடிவேல் விவசாயி. இவரது மகன் கவியரசன் (25). இவர் சில தினங்களுக்கு முன்பு வெளியில் சென்று வருகிறேன் என்று கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள், நண்பர்கள் வீடு என எங்கு தேடியும் கவியரசன் கிடைக்காததால் வடிவேல் கறம்பக்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து கவியரசனை தேடி வருகின்றனர்.

Related Stories: