×

தாம்பரம் மாநகராட்சி தேர்தலுக்கு திமுக வேட்பாளர்கள் பட்டியல்: சென்னைக்கு 11 வார்டுகளுக்கான முதல் பட்டியலும் வெளியானது

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 11 வார்டுகளுக்கும், தாம்பரம் நகராட்சிக்கு முழுமையான வேட்பாளர் பட்டியலையும் திமுக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ளது. நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் 3வது கட்ட வேட்பாளர் பட்டியலை கட்சியின் பொது செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்டுள்ளார்.
அதில், காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் சென்னை மாநகராட்சி ஆலந்தூர் வடக்கு பகுதி 156வது வார்டு- ஜெ.செல்வேந்திரன், 157வது வார்டு -தேவி ரவி, 158வது வார்டு-பாரதி வெங்கடேஷ், 159வது வார்டு- அமுதபிரியா செல்வராஜ், 160வது வார்டு- பிருந்தா முரளிகிருஷ்ணன், 161வது வார்டு- ரேணுகா சீனிவாசன், ஆலந்தூர் தெற்கு பகுதி 162வது வார்டு- ஏ. சாலமோன், 163வது வார்டு- பூங்கொடி ஜெகதீஸ்வரன், 164வது வார்டு- தேவி ஏசுதாஸ், 166வது வார்டு- என். சந்திரன்,167- துர்காதேவி நடராஜன் ஆகியோர் போட்டியிடுவார்கள்.

தாம்பரம் மாநகராட்சி 1வது வார்டு-கலைவாணி பிரபு, 2வது வார்டு- இரா. நரேஷ்கண்ணா, 3வது வார்டு-வாணி விஜயகுமார், 4வது வார்டு- சித்ரா தமிழ்குமரன், 6வது வார்டு-கல்யாணி டில்லி, 7வது வார்டு- மு.இன்பசேகர். 8வது வார்டு- ரம்யா சத்தியப்பிரபு, 9வது வார்டு- லதா சிவகுமார், 10வது வார்டு-மதினா பேகம் ஹனிபா, 11வது வார்டு-வே. கருணாநிதி, 12வது வார்டு- சத்தியா மதிவாணன், 13வது வார்டு-ரேணுகாதேவி பரமசிவம், 14வது வார்டு- மங்கையர்திலகம் ராஜ்குமார், 15வது வார்டு-டி.வி.ராஜேந்திரன், 16வது வாார்டு-எஸ். நெடுஞ்செழியன், 17வது வார்டு-ஜோசப் அண்ணாதுரை, 18வது வார்டு-பிரேமலதா பண்டரிநாதன், 19வது வார்டு-பிருந்தாதேவி சிலம்பரசன், 21வது வார்டு-கலைச்செல்வி வெங்கடேசன், 23வது வார்டு- ஏ.ரங்கநாதன்.

24வது வார்டு-கீதா நாகராஜன், 27வது வார்டு-மகேஸ்வரி கார்த்திகேயன், 29வது வார்டு-சுந்தரி ஜெயக்குமார், 30வது வார்டு- ஜி.காமராஜ், 31வது வார்டு- சித்ராதேவி முரளிதரன்,32வது வார்டு-வசந்தகுமாரி கமலகண்ணன், 33வது வார்டு- சி.சுரேஷ், 34வது வார்டு-ஆதிலட்சுமி தேவேந்திரன், 36வது வார்டு-சரஸ்வதி சந்திரசேகர், 37வது வார்டு-மகாலட்சுமி கருணாகரன், 38வது வார்டு-சரண்யா மதுரைவீரன், 39வது வார்டு-நந்தினி ஜெயக்குமார், 40வது வார்டு- வி. விஜயரங்கன், 41வது வார்டு- கற்பகம் சுரேஷ், 42வது வார்டு-கல்யாணி மணிவேல், 43வது வர்டு-சி.ஜெகன், 44வது வார்டு-இரா.ராஜா, 45வது வர்டு- ஆர்.தாமோதரன், 46வது வார்டு-ரமணி ஆதிமூலம், 47வது வார்டு-ஆர்.கே.பாலாஜி, 48வது வார்டு-சசிகலா கார்த்திக், 49வது வார்டு- டி.காமராஜ், 51வது வார்டு-லிங்கேஸ்வரி தர்குமார், 53வது வார்டு-டி.ஆர்.கோபி, 54வது வார்டு- ஜி.கருணாகரபாண்டியன், 55வது வார்டு- பெ.புகழேந்தி, 56வது வார்டு-எஸ்.சேகர், 57வது வார்டு- கமலா சேகர், 58வது வார்டு-மதுமிதா மதன், 59வது வார்டு- ராஜேஸ்வரி சங்கர், 60வது வார்டு-சௌமியா ரத்னகுமார், 62வது வார்டு- எஸ். இந்திரன், 63வது வார்டு- பி.ஜோதிகுமார், 66வது வார்டு-மணிமேகலை ஞானபிரகாசம், 67வது வார்டு-ஆ.நடராஜன், 68வது வார்டு-ரமாதேவி செந்தில்குமார், 69வது வார்டு- இ.எம்.சாம்சன், 70வது வார்டு- வி.ஜெயராமன் ஆகியோர் போட்டியிடுவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Dhambaram ,Chennai ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...