×

திருமங்கலம், பேரையூர், உசிலம்பட்டியில் வாக்கு எண்ணிக்கை மையங்கள் ஆய்வு

பேரையூர்: பேரையூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பேரையூர், டி.கல்லுப்பட்டி, எழுமலை ஆகிய 3 பேரூராட்சிகளின் தேர்தல் வாக்கு இயந்திரங்கள் வைக்கும் அறை, வாக்கு எண்ணும் அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இம்மையத்தை கலெக்டர் அனீஸ்சேகர் நேற்று பார்வையிட்டார்.
அப்போது வாக்கு இயந்திரங்கள் வைக்கும் அறை, வாக்கு எண்ணிக்கை அறை பாதுகாப்பாகவும், செயல்பாடுகளுக்கு ஏதுவாக உள்ளதாகவும் இருக்கிறதா என ஆய்வு செய்தார். தொடர்ந்து கலெக்டர், திருமங்கலம் நகராட்சி வாக்கு எண்ணிக்கை மையமான பிகேஎன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு செய்தார். இதேபோல் எஸ்பி பாஸ்கரன் வாக்கு எண்ணிக்கை மையங்களான உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி, பேரையூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று ஆய்வு செய்தார்.


திருமங்கலம், உசிலம்பட்டி, டி.கல்லுப்பட்டி, அலங்காநல்லூர், சோழவந்தான் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

திருமங்கலம்: திருமங்கலம் நகராட்சியில் 27 வார்டுகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் விவரங்கள்: வார்டு 1 விஜயன், 2 பாண்டி, 3 தங்கபாண்டியன், 4 கலைச்செல்வி, 5 வைரமணி, 6 மகேஸ்வரி, 7, முருகன், 8 தங்கம், 9 போதுராஜன், 10 கவிதா, 11 ஊஷா, 12, சித்ரா, 13, மீனாட்சி, 14 அமலிகிரேசி, 15 ஜெயலட்சுமி, 16 முருகேஸ்வரி, 17 உமா, 18, மலர்விழி, 19, நாசித்பானு, 20 கன்சுல் மகரிபா, 21 சஞ்சய், 22 அலமேலு, 23 விக்டோரியா, 24 லிஜயலட்சுமி, 25 பிரதீபா, 26 செல்வராஜ், 27 பாலகிருஷ்ணன். உசிலம்பட்டி நகராட்சியில் 24 வார்டு அதிமுக வேட்பாளர்கள் விபரம்: வார்டு 1 செல்லத்தாய், 2 கீதாலெட்சுமி, 3 ரமா, 4 ராமன், 5 லட்சுமணன், 6 வீரம்மாள், 7 கலாவதி, 8 பூமா ராஜா, 9 தேவசேனா, 10 நிஷா, 11 சுகிர்தா, 12 ராஜேஸ்வரி, 13 ஜெயசுதா, 14 முத்துலெட்சுமி, 15 பார்வதி, 16 பாண்டி, 17 கண்ணன், 18 ஆனந்தன், 21 பொன்பாண்டியம்மாள், 22 வின்சி ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். 19, 20 வார்டுகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.

டி.கல்லுப்பட்டி பேரூராட்சியில் 15வார்டு அதிமுக வேட்பாளர்கள் விபரம்: வார்டு 1 பேச்சியம்மாள், 2 செல்லம்மாள், 3 சரவணகுமார், 4, இந்திராதேவி, 5 பதினெட்டான், 6 மாணிக்கம், 7 ராணி, 8 மல்லிகா, 9 ஜெயராமன், 10 முருகன், 11 லட்சுமி, 12 லட்சப்பா, 13 அஞ்சுகம், 14 நாகலட்சுமி, 15 சங்கர்சுப்புலட்சுமி. அலங்காநல்லூர் பேரூராட்சியில் 15 வார்டு அதிமுக வேட்பாளர்கள் விபரம்: வார்டு 1, ராமலட்சுமி, 3 சரிதா, 4 வெள்ளை கிருஷ்ணன், 5 லதா, 6 சுந்தரராஜன், 7 சுந்தரராகவன், 8 ராஜகனி, 9 பாஸ்கரன், 10 மதலையம்மாள், 11 புளியம்மாள், 12 முரளி, 13 நித்யா, 14, பஞ்சவர்ணம், 15 அழகுராஜ். இந்த பேரூராட்சியில் 2வது வார்டில் கிராம பொது வேட்பாளர் நிற்பதால் அதிமுக வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. சோழவந்தான் பேரூராட்சியில் 18 வார்டு அதிமுக வேட்பாளர்கள் விபரம்: வார்டு 1 முத்துலட்சுமி, 2 வெண்ணிலா, 3 கணேசன், 4 சின்னச்சாமி, 5 வசந்தி, 6 சரண்யா, 7 கணேசன், 8 நாகராஜ், 9 பிரேம்குமார், 10 முருகேசன், 11 பரமசிவம், 12 ரேகா, 13 முத்துலட்சுமி, 14 ஜெயராணி, 15 ஜெனகராஜன், 16 மகாலட்சுமி, 17 சண்முகராஜபாண்டியன், 18 பூமாதேவி.

Tags : Thirumangalam ,Peraiyur ,Usilampatti ,
× RELATED மதுரை திருமங்கலம் அருகே விபத்தில் 4 பேர் பலி