நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி 100% வெற்றி பெறும் அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

திருச்செந்தூர், பிப். 2: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், நேற்று முன்தினம் இரவு தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சுவாமி தரிசனம் செய்தார். மூலவர் சன்னதி, சண்முகர், பெருமாள் சன்னதிகளில் தரிசனம் செய்த அவர், பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதையொட்டி மாணவர்கள் நலன் கருதி சுழற்சி முறையின்றி அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டு உள்ளது. மாணவர்கள், பெற்றோர் அச்சப்பட தேவையில்லை. சுகாதாரத்துறை அறிவுறுத்தல்படி உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே நடந்து முடிந்த 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தலில்  100 சதவீதம் வெற்றியை பெற்றுள்ளோம்.  முதல்வரின் நல்லாட்சிக்கு நற்சான்றிதழ் வழங்கும் வகையில், வர இருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் 100 சதவீத வெற்றியை திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் பெறும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

Related Stories: