×

சங்கரன்கோவில் நகராட்சி திமுக கூட்டணி வேட்பாளர்கள் அறிவிப்பு

சங்கரன்கோவில்,பிப்.2:  சங்கரன்கோவில் நகராட்சியில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். 30 வார்டுகளில் 21வார்டுகளில் திமுக போட்டியிடுகிறது. சங்கரன்கோவில் நகராட்சியில் மொத்தம் 30 வார்டுகள் உள்ளன. இதில் திமுக 21 வார்டுகளில் போட்டியிடுகிறது. மதிமுக 5 வார்டுகளிலும், காங்கிரஸ் 2 வார்டுகளிலும், இந்திய கம்யூனிஸ்டு மற்றும் மார்க்சிஸ்ட் தலா 1 வார்டிலும் போட்டியிடுகிறது.  திமுக சார்பில் 2ம் வார்டில், கணேசன், 5ம் வார்டில் முனியசாமி, 6ம் வார்டில் கவுசல்யா, 10ம் வார்டில் முத்துலட்சுமி, 11ம் வார்டில் ராஜரோகிணி, 12ம் வார்டில் செண்பகவல்லி, 13ம் வார்டில் மாரியப்பன், 14ம் வார்டில் மாரிச்சாமி, 15ம் வார்டில் வீராச்சாமி, 16ம் வார்டில் நேரு, 17ம் வார்டில் விஜயகுமார், 18ம் வார்டில் ராமு, 19ம் வார்டில் முத்துமாரிபிரகாஷ், 20ம் வார்டில் செய்யதுஅலி, 22ம் வார்டில் உமா மகேஸ்வரி,  25ம் வார்டில் நிரஞ்சனாடைட்டஸ், 26ம் வார்டில் சிவசங்கரி, 27ம் வார்டில் புனிதாஅஜய்மகேஷ்குமார், 28ம் வார்டில் வள்ளி, 29ம் வார்டில் அலமேலு, 30ம் வார்டில் வேல்ராஜ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ் சார்பில் 3 வது வார்டில் உமாசங்கர், 7ம் வார்டில் கார்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 4ம் வார்டில் ஆனந்தவடிவு, மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் 8ம் வார்டில் மாணிக்கம் போட்டியிடுகின்றனர். மதிமுக 1, 9, 21, 23, 24 ஆகிய 5 வார்டுகளில் போட்டியிடும் நிலையில் அக்கட்சி வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Tags : Sankarankoil Municipal ,DMK Alliance ,
× RELATED திமுக கூட்டணி தேர்தல் அலுவலகம் திறப்பு