×

திருவையாறு ஒன்றியத்தில் ரூ. 75 லட்சத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள்

திருவையாறு.பிப்.2: திருவையாறு ஒன்றியத்தில் ரூ.75லட்சத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கூடுதல் கலெக்டர் காந்த் ஆய்வு செய்தார். திருவையாறு ஒன்றியத்தில் ரூ.75 லட்சம் செலவில் கண்டியூர், திருச்சோற்றுத்துறை, கல்யாணபுரம் 2-ம் சேத்தி, கல்யாணபுரம் 1-ம் சேத்தி, முகாசாகல்யாணபுரம் ஆகிய ஊராட்சிகளில் மகாத்மாக காந்தி ஊரக வேலை வாய்ப்புத்திட்டம், ஜல்ஜீவன் திட்டத்தில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் திட்டம், மேல்நிலைநீர்தேக்கத் தொட்டி, பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்டம், ஆகிய திட்டங்களில் ஊராட்சிமன்ற அலுவலகம், குடியிருப்பு வீடு, மாட்டு கொட்டகை, சிமெண்ட் சாலை, ஆகிய பணிகள் நடைபெற்றுவருகிறது. தஞ்சை மாவட்ட கூடுதல் கலெக்டர்(வளா்ச்சி) காந்த் நோில் வருகை தந்து அனைத்து திட்டப்பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்து பயனாளிகளிடம் திட்டங்களைப்பற்றி கேட்டறிந்தார். அதை தொடா்ந்து நடைபெற்றுவரும் திட்டப்பணிகளை ஆய்வுசெய்து விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது ஊராட்சி ஒன்றிய ஆணையா்கள் நந்தினி, ஜான்கென்னடி, உதவிபொறியாளா்கள் விஜயகுமார், லதா, அதிகாரிகள், ஊராட்சிமன்றத் தலைவா்கள், ஊராட்சி செயலா்கள் ஆகியோர் உடனிருந்தனா்.

Tags : Thiruvaiyaru Union ,
× RELATED திருவையாறு ஒன்றியக்குழு கூட்டம்