உடன்குடி, பிப். 1: திமுக கூட்டணியில் உடன்குடி பேரூராட்சி 16வது வார்டு மமகவிற்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. இதற்கான ஒப்பந்த படிவத்தை திமுக தெற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், மமக மாநில துணை பொதுச்செயலாளர் ஜோசப் நொலாஸ்கோ, மாவட்ட தலைவர் ஆஸாத் ஆகியோரிடம் வழங்கினார். இதில் உடன்குடி நகர தலைவர் ஷேகு முஹம்மது, மாவட்ட ஊடக செயலாளர் முகம்மது ஆபித், நகர பொருளாளர் ஹமீது, ஒன்றிய செயலாளர் சாதிக் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.