×

காலிப்பணியிடங்களை நிரப்பிட கோரி நில அளவை அலுவலர்கள் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிப்பு


திருவாரூர், பிப்.1: காலிப்பணியிடங்களை நிரப்பிட கோருதல் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகைள வலியுறுத்தி தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை அளித்தனர். நில அளவை துறையில் நில அளவர் முதல் கூடுதல் இயக்குனர் வரை உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும். களப் பணியாளர்களின் பணி சுமையை குறைத்து பணியை முறைப்படுத்திட வேண்டும். களப்பணியாளர்கள், வரைவாளர் மற்றும் அமைச்சு பணியாளர்களை ஒருங்கிணைக்கும் முன்மொழிவுகள் கைவிடப்படும் என்று எழுத்துப்பூர்வமாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். நிலுவை மனுக்களை காரணம் காட்டி மேற்கொள்ளும் மாவட்ட மாறுதல்களையும், ஒழுங்கு நடவடிக்கைகளையும் கைவிட வேண்டும். தள்ளுபடி விகிதத்தை குறைத்திட கூட்டுபட்டா பரிந்துரையை ஏற்படுத்திட வேண்டும்.

ஊழியர் விரோத போக்கை கடைபிடிக்கும் உயர் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் குரூப் 4 நடைமுறையிலுள்ள எஸ்எஸ்எல்சி கல்வித்தகுதி அடிப்படையிலேயே நில அளவர் பணி நியமனத்தை தொடர்ந்திட வேண்டும். துணை ஆய்வாளர்கள் மற்றும் ஆய்வாளர்களின் ஊதிய முரண்பாடுகளை களைந்திட வேண்டும் என்பது உட்பட 14 அம்ச கோரிக்கைகளுக்காக வரும் 15ம் தேதி தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்துவதை வலியுறுத்தி கோரிக்கைகள் குறித்து தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் நேற்று திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் புண்ணியகோட்டியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதில் மாநில தலைவர் காயம்பு தலைமையில், மாவட்ட தலைவர் கார்த்திகேயன், துணைத் தலைவர் ராஜமாணிக்கம், மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், இணைச் செயலாளர் தேவசுலோச்சனா, பொருளாளர் மகேஸ்வரி மற்றும் வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில செயலாளர் சோமசுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Collector's Office of the Land Surveyors' Association ,
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...