மீஞ்சூரில் காங்கிரஸ் தனித்துப்போட்டி

பொன்னேரி: மீஞ்சூர் பேரூராட்சியில் நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிட மீஞ்சூர் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் ஆலோசனை கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மீஞ்சூர் நகர தலைவர் வக்கீல் துரைவேல் பாண்டியன் தலைமை வகித்தார். சோழவரம் வடக்கு வட்டார தலைவர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் பேரூராட்சியில் அடங்கிய 18 வார்டுகளிலும் தனித்து போட்டியிடப் போவதாக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Related Stories: