கால்நடை விழிப்புணர்வு முகாம்

அரியலூர், ஜன.31: அரியலூர் மாவட்டம் திருமானூர் அடுத்த அயன்சுத்தமல்லி கிராமத்தில், கால்நடை பராமரிப்பு துறை சார்பில் கால்நடை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சித் தலைவர் உலகநாதன் தலைமை வகித்தார். கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குநர் செல்வராஜ் முகாமை தொடங்கி வைத்தார். உதவி கால்நடை மருத்துவர்கள் ரெங்கசாமி, செல்வி, மணிகண்டன், கால்நடை ஆய்வாளர்கள் செல்வராணி, மாலதி, கால்நடை உதவியாளர்கள்,ஆகியோர் கொண்ட மருத்துவ குழு, முகாமில் கலந்து கொண்டு, கால்நடைகளுக்கு சினை பரிசோதனை, ஆண்மை நீக்கம், குடற்புழு நீக்கம், துள்ளுமாரி நோய், தொண்டை அடைப்பான் தடுப்பூசி, சினை பரிசோதனை, செயற்கை முறை கருவூட்டல், மலடு நீக்கம் உள்ளிட்டவைகளுக்கு சிகிச்சை அளித்தனர்.

Related Stories: