×

குற்றப்புலனாய்வு பிரிவு டிஎஸ்பிக்கு அசாதாரன நுண்ணறிவு திறன் பதக்கம்

பொன்னமராவதி, ஜன.31: பொன்னமராவதி அருகே உள்ள செல்லியம்பட்டி கிராமத்தை சேர்ந்த ஒருங்கிணைந்த குற்றப் புலனாய்வுப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் பொன்-துரைப்பாண்டியனுக்கு அசாதாரன நுண்ணறிவுத்திறன் பதக்கம் வழங்கப்பட்டது. சென்னை காவல்துறை ஒருங்கிணைந்த குற்றப் புலனாய்வுப்பிரிவு துணைக் கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் பொன்-துரைப்பாண்டியன். இவருக்கு நாட்டின் 73வது குடியரசு தினத்தை முன்னிட்டு ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் வழங்கும் அசாதாரன நுண்ணறிவுத் திறன் பதக்கம் வழங்கி கவுரவிக்கப்பட்டது. அசாதாரன நுண்ணறிவுத் திறன் பதக்கம் பெற்ற பொன்- துரைப்பாண்டியனுக்கு காவல்துறை உயர் அதிகாரிகள், நண்பர்கள் மற்றும் செல்லியம்பட்டி ஊர் பொது மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Tags : Intelligence for Criminal Investigation Division ,DSP ,
× RELATED கஞ்சா விற்ற முதியவர் கைது