மண்ணச்சநல்லூர், லால்குடி ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகள்

திருச்சி, ஜன. 31: திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர், லால்குடி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை கலெக்டர் சிவராசு நேரில் ஆய்வு செய்தார். மண்ணச்சநல்லூரில் ரூ.3.07 கோடியில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டிடப் பணிகளையும், பூனாம்பாளையத்தில், உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் மக்கள் வழங்கிய மனுவின் மீது நடவடிக்கை மேற்கொண்டு டிடி சாலை முதல் அழகு நகர் வரை ரூ.14.04 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட ஓரடுக்கு கப்பி சாலையினையும், பூனாம்பாளையம் ஊராட்சியில் ரூ.34.40 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள அடர்வனத்தில் ரூ.14.63 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் கற்கல் பதித்தல் பணியினையும், ரூ.8.22 லட்சம் மதிப்பீட்டில் சேவை மையம் முதல் கடை வீதி வரை சதுர குழி அமைக்கும் பணி நடைபெற்று வருவதையும், லால்குடி ஒன்றியம் தச்சன்குறிச்சியில் ரூ.29 லட்சம் மதிப்பில் உருவாக்கப்படும் மியாவாக்கி அடர்வனத்தினையும் கலெக்டர் சிவராசு ஆய்வு செய்தார். இப்பணிகளை விரைந்து முடித்திட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பிச்சை, வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories: