×

ஆவணமின்றி விதை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை: விதை ஆய்வு துணை இயக்குனர் எச்சரிக்கை

திருவள்ளூர்: சென்னை மண்டல விதை ஆய்வு துணை இயக்குனர் ரவீந்திரா வௌியிட்ட செய்திக்குறிப்பு: உரிமம் பெறாமலும், விற்பனை பட்டியல் இல்லாமலும், விதை விவர அட்டை இல்லாமலும், விதை சட்ட நடைமுறையை பின்பற்றாமலும், வாட்ஸ்அப், இணையதளம் வாயிலாக விற்பனை செய்யும் விதைகளை, விவசாயிகள் யாரும் வாங்க வேண்டாம். விவசாயிகள், விதையினை, அரசு உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்களில் மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும்.

விதை உற்பத்தியாளர்கள், தாங்கள் விற்கும் புதிய விதை ரகங்களுக்கு, விதை சான்று இயக்குனர் அலுவலகத்தில், பதிவு பெற்றிருக்க வேண்டும். பதிவு எண் மற்றும் முளைப்புத் திறன் அறிக்கை இல்லாமல், விற்பனை செய்தால், விதை சட்டம் 1966 ன் படி, விற்பனை தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறியுள்ளார்.

Tags : Deputy Director ,Seed ,
× RELATED களக்காடு மலையில் நீரோடைகள் வறண்டு...