வண்டலூர் - மீஞ்சூர் புறவழிச்சாலையில் நின்ற லாரி மீது பைக் மோதி 3 பேர் பலி

தாம்பரம்: வண்டலூர் - மீஞ்சூர் புறவழிச்சாலையில், மண்ணிவாக்கம், புதுநகர் அருகே நேற்று இரவு லாரி ஒன்று சாலையோரமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், இருசக்கர வாகனம் ஒன்று லாரியின் பின்புறத்தில், எதிர்பாராதவிதமாக வேகமாக மோதியது. இதில், இருசக்கர வாகனத்தில் வந்த 30 வயது மதிக்கத்தக்க ஆண், 14 வயது மதிக்கத்தக்க சிறுவன், 7 வயது மதிக்கத்தக்க சிறுமி ஆகிய மூன்று பேருக்கும் தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த, ஓட்டேரி போலீசார் 3 உடலையும் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: